
About The Event
வணக்கம்! 03.10.2024 அன்று தமிழ்த்துறை மாணவர்கள் திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்) அமைந்துள்ள விருத்தகிரிஸ்வரர் கோயிலுக்கு கள ஆய்வுக்கு சென்று வர வாய்ப்பளித்த நமது கல்லூரி செயலர், முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தலத்தின் தல வரலாறு, தல விருட்சம், கல்வெட்டு, சிற்பக்கலை, வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை மாணவர்கள் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டனர். இக்கோயில் சமயக் குரவர்களால் (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்) பாடல் பெற்ற நடுநாட்டு சிவதலங்களில் முக்கியமானதாகும்.இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இக்கோயில் சோழ அரசி செம்பியன்மாதேவி யால் கட்டப்பட்டது.இதில் சோழர் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் உள்ளன.