
About The Event
தமிழ்த்துறை
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! குறித்த விழிப்புணர்வுப் பேரணி
தமிழ்த்துறை சார்பாக 26.08.2025 அன்று பின்னல்வாடி கிராமத்தில் வெளிக்கள சேவை திட்டத்தின் (outreach program) ஒரு பகுதியாக மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! என்ற தாரக மந்திரத்தை முதன்மையாகக் கொண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. முதலாவதாக இப்பேரணி தொடங்குவதற்கு முன் பின்னல்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.எம்.மணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. மேலும், ஊரின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டாமாண்டு தமிழ்த்துறை மாணவி ஐடன்சியா மரங்களை வளர்த்து பசுமை கிராமமாக மாற்றுவதன் நோக்கம் மற்றும் அதன் அவசியம் குறித்தும் அருமையானதொரு உரை நிகழ்த்தினார். நம் கல்லூரியின் முன்னெடுப்பினை ஊராட்சி மன்றத் தலைவர் திரு .எம்.மணி அவர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். பிறகு ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு பேரணியைத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட பனை விதைகள் நடுவதன் தொடக்கமாக ஒரு சில பனை விதைகளை நம் தமிழ்த்துறை மாணவர்கள் நட்டனர்.
இப்பேரணியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த்துறை மாணவர்களால் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு வாசகங்கள் கோஷமிடப்பட்டும் உற்சாகமாக நடத்தப்பட்டது.
ஏராளமான கிராம மக்கள் கூடி, இப்பேரணியில் கூறப்பட்ட செய்தியைத் தீவிரமாகக் கேட்டனர், இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அருமையானதொரு இப்பேரணி நடத்த எங்களுக்கு வாய்ப்பு அளித்த கல்லூரி நிர்வாகத்தின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் இந்த அர்த்தமுள்ள நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பளித்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி..