About The Event
தமிழ்த்துறை கால்டுவெல் தமிழ் மன்றத்தின் சார்பாக ” *சங்க இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள்* ” எனும் தலைப்பில் கருத்தரங்கம் சிறப்பாக 21.08.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஏபிசி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முனைவர்.க. திலகவதி, மேனாள் தலைவர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் அவர்கள் கலந்து கொண்டு சங்க இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் என்பதைக் குறித்து மாணவர்களுக்கு ஆழமான விளக்கங்களைத் தந்தார்.
கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர்.அமலி அன்பரசி அவர்களும், முதல்வர் முனைவர்.
எஸ். வில்லியம் சுரேஷ்குமார், மற்றும் துணை முதல்வர் அருட்சகோதரி சிந்தியா ராபின்சன், ஆகியோர்களும் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்தக் கருத்தரங்கில், தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தமிழ் இலக்கியத்தின் சிறப்பை அறிந்து பயனடைந்தனர்.
இவ்விழா தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாறு தமிழின் பெருமையை உயர்த்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி.



