புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எறையூர் – தமிழ்த்துறை சார்பில், “ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி – கதை சொல்லுதல்” என்ற தலைப்பில் கதை சொல்லும் நிகழ்ச்சி 07.10.2026 அன்று காலை 11 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் அமலி அன்பரசி அவர்கள் சிறப்பித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். வில்லியம் சுரேஷ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி ஜாஸ்மின் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மாணவர்களிடையே கதை சொல்லும் திறன், கற்பனைத்திறன், படைப்பாற்றல், மொழித்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதாகும். கதைகளின் வழியாக வாழ்வியல் சிந்தனைகளையும், அறநெறிகளையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.

மாணவர்களின் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தமிழ்மொழியின் சிறப்பையும் கதை சொல்லும் கலையின் மேன்மையையும் உணர்த்தியது.
இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய பேராசிரியர்களுக்கும், ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்களுக்கும் தமிழ்த்துறை சார்பில் நன்றிகள்!

தமிழ்மொழி வளர்ப்போம்!
கதை சொல்லும் கலையைப் போற்றுவோம்!
மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்போம்! 🌷
© 2026 St. Charles College of Arts and Science, Eraiyur. All Rights Reserved. Powered by Bosco Soft Technologies Pvt. Ltd.