Co-Curricular Activities

  • Home
  • Co-Curricular Activities

தமிழ் இலக்கியத்தில் மனிதநேயம் - கருத்தரங்கம்

21 Aug, 2026

தலைப்பு: “தமிழ் இலக்கியத்தில் மனிதநேயம்”

நாள்: 21.08.2026 வெள்ளிக்கிழமை
இடம்: ABC அரங்கம்
நேரம்: முற்பகல் 11.00 மணி

புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கால்டுவெல் தமிழ்மன்றத்தின் சார்பில் “தமிழ் இலக்கியத்தில் மனிதநேயம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் 21.08.2026 அன்று ABC அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கருத்தரங்கம் கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோதரி அமலி அன்பரசி அவர்களின் வாழ்த்துரையுடனும், கல்லூரி முதல்வர் முனைவர் செ. வில்லியம் சுரேஷ் குமார் அவர்களின் தலைமையிலும், கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி ஜாஸ்மின் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, முதலாமாண்டு தமிழ்த்துறை மாணவி சாதனா அவர்கள் வரவேற்புரை வழங்கி, கருத்தரங்கிற்கு வருகை தந்த கல்லூரிச் செயலர், முதல்வர், சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களை அன்புடன் வரவேற்றார்.

தொடர்ந்து கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோதரி அமலி அன்பரசி அவர்கள் வாழ்த்துரையாற்றினார். அவர் தம் வாழ்த்துரையில் தமிழ் படிக்கும் மாணவர்கள் தமிழைத் தெளிவான உச்சரிப்புடனும், பிழையின்றியும், இனிமையாகவும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். தமிழ் மொழியின் சிறப்பையும், அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய மாணவர்களின் கடமையையும் எடுத்துரைத்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் செ. வில்லியம் சுரேஷ் குமார் அவர்கள் தலைமையுரையாற்றினார். “தமிழ் இனிமையான மொழி; தமிழைப் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் பல உள்ளன” என்பதை எடுத்துரைத்து, மாணவர்கள் தமிழை ஆர்வத்துடனும் தொழில்முறை நோக்குடனும் கற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வேட்டவலம் லயோலா கல்லூரி, உதவிப்பேராசிரியர் ம. ஆரோக்கியதாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். “தமிழ் இலக்கியத்தில் மனிதநேயம்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மனிதநேயம், அன்பு, இரக்கம், ஈகை, பிறர்நலம் பேணுதல், அறம் போன்ற உயரிய பண்புகளை விரிவாக எடுத்துரைத்தார்.

இலக்கியங்கள் வெறும் கற்பனைப் படைப்புகள் மட்டுமல்ல; அவை மனிதனை நல்வழிப்படுத்தும் வாழ்வியல் வழிகாட்டிகள் என்பதையும் மாணவர்களுக்கு விளக்கினார். மாணவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படிப்பதன் மூலம் மனிதநேயச் சிந்தனைகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி மேரி ஐயன்சியா அவர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி விமலா நன்றியுரை வழங்கி, கருத்தரங்கினைச் சிறப்பாக நடத்த உதவிய கல்லூரிச் செயலர், முதல்வர், சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் தமிழ்த்துறை பேராசிரியர்களும் மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் மனிதநேயச் சிந்தனைகளை அறிந்து பயன் பெற்றனர்.

நிறைவாக, “இலக்கியம் கற்பது அறிவை வளர்ப்பதற்காக மட்டுமல்ல; மனிதநேயத்தோடு வாழ்வதற்கும் வழிகாட்டுகிறது” என்ற உயரிய கருத்தை மாணவர்களிடம் விதைத்த நிகழ்வாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

Admissions Open 2026 - 2027