Department of Tamil

  • Home
  • Department of Tamil

கல்வி என்பது மனித வாழ்க்கையை உயர்த்தும் மிக முக்கியமான கருவி. ஒருவரின் அறிவையும், சிந்தனைத் திறனையும், சமூகப் பொறுப்பையும் வளர்க்கும் ஆற்றல் கல்விக்கே உரியது. ஆனால் இன்று சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் காரணமாக ஏராளமான ஏழை மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பெற முடியாமல் தவிக்கின்றனர். ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்குவது தனிப்பட்ட நலனுக்காக அல்ல அது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையாகும். அத்தேவையினை கருத்தில் கொண்டு ஏழை மாணவர்களுக்கு மிகச் சிறந்த கல்விச் சேவையை வழங்கி வருகிறது புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் அறிவியல் கல்லூரி.

தமிழ் துறை (Department of Tamil)

2020 – 2021 ஆம் ஆண்டு 12 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்துறை மாணவர்கள் மொழியறிவை வளர்த்துக் கொள்வதுடன் பல்வேறு துறைகளில் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பழமையும் பெருமையும் நிறைந்த தமிழின் செல்வங்களையும் தமிழ் மொழியின் பண்பாட்டு மரபுகளையும், நவீனத் தொழிற் நுட்பத்துடன் படைப்பாற்றலுக்கு வித்திடும் சூழலை இத்துறை வழங்குகிறது. கல்வியும் ஒழுக்கமும் இக்கல்லூரியின் இரு கண்களாகப் போற்றப்படுகிறது.

மேலும், 2026 – 2027 கல்வியாண்டு முதல் எம்.ஏ. தமிழ் (M.A. Tamil) முதுகலைப் பட்டப்படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடநெறி மூலம் தமிழ் இலக்கியம், இலக்கணம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, ஊடகம் மற்றும் ஆய்வியல் துறைகளில் மாணவர்கள் உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளுக்குத் தயாராகும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

 Vision – தொலை நோக்குப்பார்வை

தமிழ் மொழியின் செழுமையான இலக்கியம், இலக்கணம், பண்பாடு ஆகியவற்றில் ஆழமான அறிவைப் பெறுவதுடன், வாழ்வியல் நெறிகளை உணர்ந்து, பகுப்பாய்வுத் திறனை வளர்த்து, இதழியல், ஊடகம், மொழிபெயர்ப்பு, போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கத் தேவையான திறன்களைப் பெற்று வாழ்வியல் அறம் சார்ந்த ஒழுக்கங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படும் படைப்பாற்றல்களை உருவாக்குவதோடு சிறந்த ஆளுமையுள்ள மனிதர்களை உருவாக்குவது.

Mission - செயல்பாடுகள்

  • தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கான முறையான வழிகாட்டுதல்களை வழங்குதல்.

  • தமிழ் மொழியை இன்றைய காலத்தின் கட்டாயமான நவீனத் தொழில்நுட்பத்துடன் இணைத்து கையாளும் திறனை மாணவர்களிடம் வளர்த்தெடுத்தல்.

  • மாணவர்களின் தனித்துவமான கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு தளங்களை உருவாக்குதல்.

  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (வுேீளுஊ) போன்ற அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்துஇ அவர்களை வெற்றிபெறச் செய்தல்.

  • மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்திஇ ஆழமான கற்றல் ஆர்வத்தை தூண்டுதல்.

  • பழங்காலத் தமிழ் கல்வெட்டுகளின் மொழியினையும்இ அதன் வரலாற்றுச் சிறப்பினையும் மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்தல்.

தமிழ் மொழியைக் கொண்டு தொழில் வாய்ப்புகளை அடைய மாணவர்களுக்கு வழிகாட்டுதல். தமிழ் மொழியை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து பயன்படுத்தும் திறனை வளர்த்தல,; மாணவர்களுடைய படைப்பாக்கத் திறன்களை வெளிக்கொண்டு வருதல், தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்து வெற்றி பெறச் செய்தல், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துதல,; பழந்தமிழின் கல்வெட்டு மொழியினை அறிந்துகொள்ளுதல் ஆகியன தமிழ்த்துறையின் செயல்பாடுகள் ஆகும்.

‘கால்டுவெல்’ தமிழ் மன்றம்

2021 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கால்டுவெல் தமிழ் மன்றம் தமிழ் மொழி சார்ந்து சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஆகியவற்றை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயலாற்றுகிறது.

தமிழ் இலக்கியம் கற்பதன் பயன்

அரசின் பல்வேறு துறைகளில் தமிழ் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிட்டுகின்றன. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதாக வெற்றி பெற முடியும்

பி.ஏ, பி.எட், எம்.ஏ, எம்.எட். பயிலுவோருக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர் பணிகள் கிடைத்து வருகின்றன. கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்துக்கு பிஎச்.டி. தமிழ் படித்தோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பத்திரிகைகள், சின்னத்திரை, வானொலி, பண்பலை - இவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. தனியார் தொலைக்காட்சிகள் நிகழ்ச்சித் தொகுப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு ஆகிய பணிகளில் தமிழ்ப் பட்டதாரிகள் கோலோச்ச முடியும்.

பிரசித்தி பெற்ற பி.பி.சி, சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றறிந்தோருக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன.தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பதிப்பகங்கள்

கணினி அச்சுத் தொடர்பான நிலைகளில் பழந்தமிழ் இலக்கியங்களை அச்சிடுதல், மின்னுருவேற்றல் ஆகியவையும் தமிழோடு பிறமொழி அறிவும் இருப்பின் மொழிபெயர்ப்பு துறையில் நல்ல வாய்ப்புகள்உள்ளன.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் ஓதுவார்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு சிறப்பான தமிழறிவு தேவைப்படுகிறது.

வெளிநாடுகளில் பணிவாய்ப்புகள்

தமிழர்கள் உலகம் முழுவதும் தற்போது தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வசிக்கின்றனர். அங்கு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அங்கும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறாக, உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்பான நிலை உள்ளது. தமிழ் படிக்கும் மாணவர்கள், இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு.

Dr. B. Chandrasekaran
M.A., B.Ed, M.Phil., Ph.D., NET
Head of the Department

chandhirasekaran.tamil@gmail.com

R. Alappan
MA., B.Ed., NET
Assistant Professor

alappan03@gmail.com

P. Angamuthu
MA., M.Phil., B.Ed, NET
Assistant Professor

pamuthu86@gmail.com

jayaprakash

E. Jaya Prakash
MA., M.Phil., NET
Assistant Professor

writerjayaprakash@gmail.com

S. Revathi
MA., M.Phil., B.Ed.,
Assistant Professor

Admissions Open 2026 - 2027